குமரி மாவட்டம் நாகர்கோவிலில்,சுங்கான்கடை பகுதியில் வின்ஸ் கல்லூரிக்கும் ஐயப்பா கல்லூரிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று இரவு ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருக்கு 30 வயதிருக்கும்.
அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கூறினர். போலீசார் உடலை கைப்பற்றி கொலை செய்யப்பட்டவர் யார், எதற்காக கொல்லப்பட்டார் என்று விசாரித்து வருகின்றனர.








