:
மதுரை மாவட்டம் திருநகரை அடுத்துள்ள மகாலட்சுமி நகரில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு ஒன்று எதிர்பாராதவிதமாக குறுகலான சாக்கடை கால்வாயில் தவறி விழுந்தது.

பசுமாடு கத்துவதை கண்ட அப்பகுதி மக்களும் மாட்டின் உரிமையாளர் பசுவை மீட்க எவ்வளவோ முயற்சி செய்தனர். எனினும், பலனளிக்கவில்லை. இதுகுறித்து, மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் கயிறுகளை கட்டி சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி இடிபாடுகளில் சிக்கிய பசுவை உயிருடன் மீட்டனர்.
