களக்காடு வியாசராஜ புரத்தை சேர்ந்த பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் அப்துல் மஜித் (49). இவர் தனது வீட்டு சமையல் அறையில் உள்ள பாத்திரத்தில் ரூ. 6 லட்சம் பணம் வைத்திருந்தார். சம்பவத்தன்று பணத்தை எடுப்பதற்காக பாத்திரத்தை பார்த்தபோது அங்கு பணம் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார்.
புகாரில், தனது தம்பி வீட்டில் புதுமனை புகுவிழா நடந்த போது எதிர்வீட்டை சேர்ந்த செய்யது அலி முத்துமீராள் பாத்திரங்கள் எடுக்க வந்தார். அவர் மீது சந்தேகம் உள்ளது என கூறியிருந்தார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் விசாரித்தபோது செய்யது அலி முத்துமீராள் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.








