மதுரை ஆரப்பாளையம் ஞான ஒளி புரம் பகுதியில், செயல்பட்டு
வரும் கரூர் வைசியா பேங்க் செயல்பட்டு வருகிறது.
இதில், தரைதளத்தில் வங்கியும் முதல் தளத்தில் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மண்டல அலுவலகத்தில்,
உள்ள குளிர்சாதன பெட்டியில் புகை வந்துள்ளது.
சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக, வங்கி ஊழியர்கள் வெளியேறிவிட்டார்கள் தீ விபத்து குறித்து மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ
இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் பாலமுருகன்
தலைமை யிலான மதுரை டவுன் தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு உள்ளே சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் ஏசி எந்திரம், சேர்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமாகின . துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால், வங்கியில் உள்ள மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
நல்வாய்ப்பாக ஊழியர்கள் அனைவரும் வெளியே வந்ததால் , தீ விபத்தில் காயமும் யாருக்கும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து, கரிமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது.