நாங்குநேரி அருகே உள்ள பூலம் பகுதியில் மூன்றடைப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள முத்துராக்கு சுடலை கோவில் அருகே அதே ஊரை சேர்ந்த சோமசுந்தரம் (வயது 37) ரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாக செல்வோரை அவதூறாக பேசி ரகளை செய்து கொண்டிருந்தார்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதுபோல நெடுங்குளத்தில் ரகளையில் ஈடுபட்டதாக அதே ஊரை சேர்ந்த சின்னத்துரை (37) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.