சாத்தான்குளம் தந்தை மகன் தந்தை மகன் கொட்டடி கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்றி இழுத்தடிக்க தமிழக அரசு முயன்றது. இந்நிலையில் இது தொடர்பாக தாமாக விசாரணை நடத்திய மதுரை உயர்நீதிமன்ற கிளை, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது .
இன்றே சிபிசிஐடி ஏ டி எஸ் பி அனில் குமார் விசாரணையை தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது. அத்துடன் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கலாம் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.














