நெல்லை அருகே ஒரே குடும்பத்தில் மூவர் வெட்டிக் கொலை

0
1334

நெல்லை தாழையூத்தையடுத்த நாஞ்சான் குளத்தை சேர்ந்த அழகர்சாமி, மரிய ராஜ் (53) ஆகியோர் பங்காளிகள். இருவருக்கும் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இன்று அழகர்சாமி பிரச்சினைக்குரிய நிலத்தில் போர் போட்டுள்ளார்.இதை மரியராஜ் தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அழகர்சாமியும் அவருடன் இருந்த உறவினர்கள் 4 பேரும் சேர்ந்து மரிய ராஜையும் அவரது தங்கை வசந்தா (40), ஜேசுராஜ் ( 60) ஆகியோரை வெட்டிச் சாய்த்தனர். இதில் அந்த இடத்திலேயே அவர்கள் இறந்தனர்.

அவர்களுடன் இருந்த மரிய ராஜ் மகன் ஆமோஸ் (22 ), வசந்தாவின் கணவர் ஜேசு ராஜ் (46) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மானூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here