குடும்ப தகராறில் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த இளம்பெண் மீட்பு இரு குழந்தைகள் உயிரிழப்பு

0
499

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கே.ஆலங்குளத்தைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவரின் மனைவி பிரவீனா. இவர்களுக்கு ஹர்ஷிகா என்ற 4 வயது பெண் குழந்தையும், பூமிகா என்ற 11 மாத குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் பிரவீனா குடும்ப தகராறு காரணமாக இன்று தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் ஊரின் அருகே உள்ள திம்மாபுரம் என்ற கிராமத்தில் உள்ள கிணற்றுக்குள் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் காரியாபட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரியாபட்டி தீயணைப்புத் துறையினர் உயிருக்கு போராடிய பிரவீனாவை மீட்டு அ.முக்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.

இதில் குழந்தைகள் ஹர்ஷீகா மற்றும் பூமிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அ.முக்குளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here