பெண்கள் பள்ளியில் ஆசிரியர்கள் வேண்டாம்:கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம்

0
1834

 

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் வேண்டாம் எனக் கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடையநல்லூர் ஆஸ்பத்திரி பேருந்து நிறுத்தம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கடையநல்லூர், மங்களபுரம், அச்சம்பட்டி, சொக்கம்பட்டி, காசிதர்மம் ,குமந்தாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 2,260 மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.

இப்பள்ளியில் பணிபுரிந்து வரும் இரண்டு ஆசிரியர்கள் பள்ளியின் நலனுக்கெதிரான செயல்களில் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனர். எனவே, பள்ளிக்கல்வித்துறை இந்த இரண்டு ஆசிரியர்களை குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவிகளின் நலன்கருதி இப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் அனைவரையும் வேறு ஆண்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசினர்.

2013ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் வகையில், அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பெண் ஆசிரியைகளை மட்டுமே நியமிக்க வேண்டும் என அரசாணை பிறப்பித்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு பெண்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here