நெல்லை மருத்துவமனைக்கு ரூ.36 லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கிய முன்னாள் மாணவர்கள்

0
1030

நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. அந்த சமயத்தில் நாள்தோறும் 600க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிகமானோர் ஆக்சிஜன் தேவையுடன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றதால் ஆக்சிஜன் நுகர்வு அதிகரித்தது.

இதையடுத்து மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனம் தஞ்சாவூர் சென்னை ஆகிய இடங்களில் தொடர்ந்து ஆக்சிஜனை பெற்று மாவட்ட நிர்வாகம் நிலைமையை சமாளித்தது. அதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு உதவிகரமாக நெல்லையில் உள்ள பல்வேறு தனியார் அமைப்புகள் தொழிலதிபர்கள் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி வந்தனர். தனியார் அமைப்புகள் வழங்கி வரும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மூலம் நெல்லை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தேவையை சமாளிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்திருந்தார்.

இச்சூழ்நிலையில் நெல்லை அரசு மருத்துவகல்லூரியில் பயின்ற முன்னாள் மருத்துவ மாணவர்கள் இன்று 36 லட்சம் ரூபாய் மதிப்பில் 55 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரனிடம் வழங்கினர். இதில் 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தலா 10 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மீதமுள்ள 50 செறிவூட்டிகள் தலா 5 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here