மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கடந்த நான்கு நாட்களாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பி வருகின்றன.
இதன் காரணமாக இன்றும் இரு அவைகளும் முடங்கின. மாநிலங்களவையில் பேசிய முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம், விதி எண் 267 இன் கீழ் மணிப்பூர் பிரச்சனை விவாதிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக 57 நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இதை சபாநாயகர் ஏற்கவில்லை. அவையை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.