இந்திய ஒன்றியத்தின் 78ஆவது சுதந்திர தின விழா நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக சுதந்திர தின விழாவில் பல புதுமைகள் நிகழ்ந்துள்ளன. சுதந்திர தின விழாவை எப்போதும் அதிதீவிர ஹிந்துத்துவ அமைப்புகள் கொண்டாடுவதில்லை. பாஜக ஆட்சியில் இருப்பதால் அதன் பிரதிநிதிகளும் இப்போது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றனர்.
அதேபோல், தமிழர்களுக்கு, தென்னிந்திய திராவிடர்களுக்கு சுதந்திரம் பலனளிக்கவில்லை என்று கூறி திராவிடர் கழகம் திராவிட முன்னேற்ற கழகம் போன்ற இயக்கங்களும் சுதந்திர தின விழாவை பெரும்பாலும் கொண்டாடுவதில்லை. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இருப்பதால் திமுகவின் கட்சி அலுவலகங்களில் கூட மூவர்ண கொடியேற்றி கொண்டாடுகிறார்கள்.
அது பரவாயில்லை.திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று காலை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன் கான் அவர்கள் தலைமையில் கொடியேற்றப்பட்டு மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளரும், கிறிஸ்தவ தேவாலயங்கள் உபதேசி பணியாளர்கள் வாரிய தலைவருமான விஜிலா சத்தியானந்த், மாவட்ட அவைத்தலைவர் வி.கே.முருகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்.வி. சுரேஷ், கிரிஜா குமார்,பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ ஐயப்பன், மாநகர பொருளாளர் .அண்ணாதுரை, மேலப்பாளையம் பகுதிகழகச் செயலாளர் துபாய் சாகுல், மேலப்பாளையம் பகுதி துணை செயலாளரான மாமன்ற உறுப்பினர் ஆமினா சாதிக் , மாநகர இளைஞரணி அமைப்பாளரும் மாமன்ற உறுப்பினருமான கேகே .கருப்பசாமி கோட்டையப்பன்,

மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் வழக்கறிஞர் நவ்ஷாத், மாவட்ட ஆதிதிராவிட நல குழு அமைப்பாளர் நவநீதன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் அனிதா, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் தொப்பி ஐ. மைதீன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறி பேரவை அமைப்பாளர் முனைவர். ராஜகுமாரி, மாநகர தொண்டர் அணி அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளரும் மாமன்ற உறுப்பினருமான ரம்ஜான் அலி , மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் செண்டு, மாவட்ட இலக்கிய அணி தலைவர் நெல்லை ரவி,மாவட்ட விவசாய அணி தலைவர் போத்திக்கண்ணு உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
ஹைலைட்
நிகழ்ச்சியில் கட்சியினர் போட்ட கோஷம் தான் ஹைலைட்டாக அமைந்தது.’ தானைத் தலைவர் கலைஞர் வாழ்க ‘, ‘ தன்மானத் தலைவர் கலைஞர் வாழ்க ‘ என்று கோஷமிட்டதும் பக்கத்து டீக்கடையில் என்றும் இந்த சிலருக்கு குழப்பம் வந்துவிட்டது.
‘ திமுக தலைவர் கருணாநிதி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாரா?’ என்று ஒருவர் நிஜமாகவே சந்தேகம் கேட்க, ‘ பள்ளி பருவத்தில் திருவாரூர் வீதியில் மூவர்ண கொடியோடு முழக்கம் இட்டுக் கொண்டிருந்தார் ‘ என்று ஒருவர் சீரியஸ் ஆகவே பதில் சொன்னார்.














