காரியாபட்டி அருகே திருட்டு மணல் பறிமுதல்

0
907

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள தண்டியனேந்தல் பகுதியில், இரவு நேரங்களில் ஆற்ற மணல் திருட்டு அதிகமாக நடந்து வருவதாக வருவாய்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனையடுத்து தண்டியனேந்தல் பகுதியை கண்காணிக்குமாறு காரியாபட்டி தாசில்தார் தனக்குமார், வருவாய்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் வருவாய்துறையினர் தண்டியனேந்தல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப்பகுதியில் திருட்டுத்தனமாக குவித்து வைக்கப்பட்டிருந்த 20 யூனிட் ஆற்று மணலை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here