குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

0
783

மதுரை வலையங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் இவரது மகன் அம்மாவாசை(42). இவர், அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட போது தந்தை அய்யனார் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து, இன்று மதுபோதையில் வந்த அம்மாவாசை வீட்டின் முன்பு வைத்திருந்த கடப்பாரை கம்பியால், தந்தையை தாக்கி கொலை செய்துள்ளார்.


இதுகுறித்து, தகவலறிந்து வந்த பெருங்குடி காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து, அமாவாசையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here