இஸ்ரோ இந்தியர்களின் நம்பிக்கையை இழக்கவில்லை – வெங்கையா நாயுடு

0
567

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு பொதுமக்களும், பிரபலங்கள் பலரும் சமூக ஊடகங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு ஆதரவாக ட்வீட் செய்து வருகின்றனர்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியதாவது:-

நம்பிக்கை இழக்க ஒன்றுமே இல்லை. லேண்டருடனான தொடர்பைத்தான் இஸ்ரோ இழந்துள்ளதே தவிர, 130 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை இழக்கவில்லை என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள முதல்-மந்திரியும் , திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி டுவிட்டில் கூறி உள்ளதாவது:-

இந்தியாவில் விண்வெளி அறிவியலுக்கு வித்திட்ட அறிஞர்களுக்கு இந்த முயற்சி சமர்ப்பணம். நம் விஞ்ஞானிகளை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்.

இஸ்ரோ குழுவினர் சந்திரயான் -2 திட்டத்துக்காக மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார். நேற்று மம்தா பானர்ஜி சந்திரயான்-2 பொருளாதார பேரழிவிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here