வரும் 19ஆம் தேதி நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி பேரூராட்சியில் போட்டியிட 60 பேர் வேட்பு மனு செய்தனர். அதன் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது . அதில் 6வது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர் .
அதுபோல பல்வேறு வார்டுகளில் சுயேட்சைகளாகவும் மாற்று வேட்பாளர்களாகவும் மனு பதிமூன்று பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர் . நான்காவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த வக்கீல் முருகன் எதிர்த்து யாரும் வேட்புமனு செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
அதுபோல மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் 74 பேர் மனு செய்திருந்த நிலையில் 15 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன இறுதியாக 59 பேர் நகர்ப்புற தேர்தலில் போட்டியை சந்திக்கின்றனர். 10-ஆவது வார்டில் சுயச்சை ஒருவர் மட்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து இவ்விரு பேரூராட்சிகளிலும் அடுத்து வரும் நாட்களில் தேர்தல் களம் சூடு பிடிக்கும் நிலையில் உள்ளது.