நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து அஜித்தின் 60ஆவது படத்தையும் ஹெ.வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இது ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் பூஜையுடன் தொடங்கவுள்ளது.
இப்படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கிறார். இதற்காக அஜித் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டதை உறுதிபடுத்தும் வகையில் அவரது மெலிந்த தோற்றப் புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகர் அஜித்தின் அடுத்த பெரிய இலக்கு மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் அகாடமி தொடங்குவது தான் என்று அவருடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ரங்கராஜ் பாண்டே தெரிவித்திருந்த நிலையில் நீச்சல் வீரரும் கின்னஸ் சாதனையாளருமான குற்றாலீஸ்வரன் உடன் அஜித் இருக்கும் படங்கள் வெளியாகி உள்ளது. அஜித் விளையாட்டு முன்னெடுப்பு குறித்து அவருடன் ஆலோசித்ததாக குற்றாலீஸ்வரன் அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ‘குற்றாலீஸ்வரனின் ரசிகன் நான்’ என்று அஜித் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.















