கல்லூரி வாசலில் மாணவர் வெட்டிக்கொலை

0
812

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சந்தையடியூரை சேர்ந்தவர் அபிமணி. அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்துவந்தார். இன்று மதியம் உணவு இடைவேளைக்கு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது கல்லூரி வாசல் அருகேயே ஒரு கும்பலால் வேடி சாய்க்கப்பட்டார். அதே இடத்தில் இறந்தார்.
கடந்த மே மாதம் சந்தையடியூரில் நடந்த அம்மன் கோயில் திருவிழாவில் அவருக்கும் மற்றொரு குழுவினருக்குமிடையே நடந்த சண்டையின் தொடர்ச்சியாக இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளதாக செய்துங்கநல்லூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here