ஜல்லிக்கட்டு ஆன்லைன் பதிவில் குளறுபடி – முன்னாள் அமைச்சர் உதயகுமார்

0
939

:

முன்கள பணியாளருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருவதை தொடர்ந்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் சரவணன் ஆகியோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதனைத் தொடர்ந்து உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


ஒரு ஆண்டில் 11 மருத்துவ கல்லூரியை உருவாக்கித் தந்த பெருமை எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் தலைமையிலான அம்மா அரசுக்கு சாரும். குறிப்பாக, இந்த 11 மருத்துவ கல்லூரிகளுக்கு 414 ஏக்கர் நிலம் வருவாய்த்துறை சார்பில் மத்திய அரசுக்கு ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ,மத்திய அரசு அனுமதி அளித்து அதை ஆராய்ந்து மருத்துவ கட்டடத்திற்கு தகுதியான இடம் என்று உறுதி அளித்ததால் இன்றைக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது.


இதற்காக மத்திய அரசு 2140 கோடியை பங்களிப்பாக அளித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 37 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது.

கூடுதலாக 11 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டதன் மூலம் கூடுதலாக 1450 மருத்துவ பணியிடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

கூடுதலாக தொடங்கப் பட்ட
11மருத்துவகல்லூரிகளுக்கு, முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆகியோர் அடிக்கல் நாட்டினார். தற்போது, பாரதப்பிரதமர் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். ஆகவே, பாரத பிரதமருக்கும், முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடியாருக்கும், ஓபிஎஸ் அவர்களுக்கும் ஜெ.பேரவை சார்பில் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.


அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு சட்டத்தை ஜெ. அரசு வழங்கியதன் மூலம் 430 மாணவர்கள்கள் பயன் பெற்று வருகின்றனர். தற்போது , அதனை பின்பற்றி அனைத்து துறை பாடங்களுக்கும் முதலமைச்சர் அமல்படுத்தியதை வரவேற்கிறோம்.


ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு,
அதை தடையில்லாமல் நடத்த வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அறிவிக்கப்பட்டுள்ள ஆன்லைன் முன்பதிவு நடைமுறையில் பல்வேறு குளறுபடிகள் நடக்க வாய்ப்புள்ளது.
தகுதி உள்ள வீரர்கள், மாடுகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் எனும் அச்சம் நிலவுகிறது.
தகுதியுள்ள காளைகள் போட்டியில் பங்கேற்க உரிய வழிகாட்டுதலை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


எய்ம்ஸ் மருத்துவமனையை குறிப்பிட்டு செங்கல் வைத்து விளம்பரம் தேடிய திமுக அரசு, இதுவரை ஒரு செங்கலை கூட நடவில்லை.
திமுக அரசு விளம்பரம் தேடுவதில் தான் கவனம் செலுத்துகிறது.
அதிமுக அரசின் திட்டங்கள் மூலம் புகழ் தேட நினைக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here