65 வயது மூதாட்டி தீ குளித்து தற்கொலை – போலீஸ் விசாரணை

0
282

வடக்கு இலந்தைகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி அழகுபாண்டி. இவருடைய மனைவி பேச்சியம்மாள் (65). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அழகுபாண்டி இறந்து விட்டார். இதனால் பேச்சியம்மாள் தனது மகள் வெயிலாட்சி மற்றும் பேரன், பேத்தியுடன் வசித்து வந்தார்.


பேச்சியம்மாள் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் மதியம் ஊருக்கு தெற்கே உள்ள மயானத்துக்கு சென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்ததில் உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here