அமித்ஷா கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது

0
1057

இந்தி தினத்தன்று அமித்ஷா கொளுத்திப்போட்ட கருத்துக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் ஜெயக்குமார், ‘ தமிழகத்தில் யரும் ஏற்றுக்கொள்ளாத விஷயம் இந்தி. அதை யாரும் திணிக்க முடியாது’ என்றார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், ‘ பிற மொழி பேசும் மாநில மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் முயற்சி. இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும். இந்தியா ஹிந்தியா அல்ல’ என்று கூறியுள்ளார். விரைவில் பொதுக்குழுவை கூட்டி இது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
‘இந்தியை விட இலக்கண செறிவு மிக்க மொழிகள் இந்தியாவில் உள்ளன. பொருளாதார பின்னடைவவை திசை திருப்புவதாகவே அமித்ஷாவின் கருத்து உள்ளது’ என தி.க. தலைவர் வீரமணி கூறியுள்ளார்.
‘உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக ஒருபோதும் இந்தி இருக்காது. ஒரு மொழியை அடையாளப்படுத்த மற்ற மொழிகளை ’ என்கிறார் டாக்டர் ராமதாஸ்.

‘நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்கவேண்டும் என்றால் அதில் தமிழகம் இருக்காது’ என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
‘இது ஜனநாயக சக்திகள் விழித்துக்கொள்ளவேண்டிய தருணம்’ என்று திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
அரசியல் தலைவர்களை வழிமொழிவதைப்போலவே,‘ஒரு நாடு இருக்கலாம். ஒரே மொழி இருக்க முடியாது. மொழிகளை அடிப்படையாக கொண்டுதான் இந்தியாவின் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன’ என்று ஜக்கி வாசுதேவ் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here