மதுரை மாநகராட்சி சொக்கலிங்கம் நகர் :69ஆம் எண் வார்டில் திமுக சார்பில் சரஸ்வதி என்பவரும், அதிமுக சார்பில் யுவஷ்ரீகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் வார்டுக்கு உட்பட்ட சொக்கலிங்கம் நகர் 2ஆவது தெருவில் அதிமுக வேட்பாளருக்காக பண பட்டுவாடா செய்ததாக, பறக்கும் படையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தனி வட்டாட்சியர் செல்வராஜ் தலைமையிலான பறக்கும் படையினர் வந்துள்ளனர்.
தொடர்ந்து வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் முயற்சியில் ஈடுபட்ட சீதாலெட்சுமி (46), ஆல்பர்ட் இருதயராஜ் (68) ஆகிய இருவரையும் பிடித்து மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசாரிடம் ஒப்படைத்து இருவர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













