உத்தர பிரதேசத்தின் பைரியா சட்டமன்ற தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங். இவர் மீது மாநில மின் துறை பொறியாளர் ராம் கிஷோர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ‘இந்த மாத தொடக்கத்தில், மொபைல் போன் வழியே தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ., இளநிலை பொறியாளர் ஒருவரை பணி இடமாற்றம் செய்யும்படி வற்புறுத்தினார்.அதில் பல கஷ்டங்கள் உள்ளன என கூறியதற்கு தகாத சொற்களால் திட்டி எம்.எல்.ஏ., உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மிரட்டினார் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சுரேந்திரசிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.