திருநெல்வேலி கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் பல இடங்களில் திருநங்கைகள் நடமாட்டம் உண்டு. அவ்வாறே பணகுடி பகுதியில் நேற்று சில திருநங்கைகள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அந்த வழியாக சென்ற வாலிபரை உறவுக்கு அழைத்ததாக கூறி பணகுடி போலீசாரிடம் புகார் அளித்தனர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லத்தி சார்ஜ் செய்து திருநங்கைகளை விரட்டினர்.
இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் ஒன்று திரண்டு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பணகுடி காவல் நிலையத்தில் தர்ணா செய்தனர். காவல் நிலையத்திற்குள் புகுந்து கதவை பூட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் போலீசார் அவர்களிடம் சமாதானமாக பேசி அனுப்பி வைத்தனர்.
இரவில் நடந்த சாலை மறியல் மற்றும் போலீஸ் நிலைய முற்றுகையால் சுமார் ரெண்டு மணி நேரம் பணகுடி அல்லோகல்லப்பட்டது.