சென்னை கேளம்பாக்கத்தில் பள்ளி நடத்தி, அப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபாவை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடிவந்தனர்.
விசாரணைக்கு ஆஜராக கூறியபோது டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக அவர் தெரிவித்தார். அங்கு தேடிச்சென்றபோது எஸ்கேப் ஆனார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட தமிழ்நாடு சிபிசிஐட் போலீசார் உத்தர்காண்டுக்கு சென்றது. அங்கிருந்து அவர் டெல்லிக்கு ஓடினார். டெல்லியில் உள்ள காசியாபாத்தில் பதுங்கியவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் சென்னைக்கு கொண்டுவரப்படுகிறார்.