கோவை உக்கடம் மீன் காலனி பகுதியை சேர்ந்தவர் முகமது ரபிக்( 42). இவர் பொன்விழா நகர் பகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளாக வடை கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவரது கடையில் தெற்கு உக்கடம் ஏ .ஜே.கே கார்டன் பகுதியைச் சேர்ந்த சையது அபுதாஹிர் (40)வடை வாங்கி சென்றார் .சிறிது நேரம் கழித்து மீண்டும் வடை கடைக்கு வந்த சையது அபுதாகிர் வடை சூடாக இல்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது முகமது ரபீக்கின் மனைவி மட்டும் கடையில் இருந்துள்ளார். சையது அபுதாஹிர் வடையை தூக்கி முகமது ரபிக் மனைவி முகத்தில் வீசினார் .

இதுகுறித்து முகமது ரபிக்கிடம் மனைவி கூறவே, அவர் அபுதாஹிர் பணிபுரிந்து வரும் உக்கடம் பழைய மார்க்கெட் கடைக்கு சென்று கேட்டுள்ளார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றிய நிலையில் சையது அபுதாஹிர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து முகமது ரபிக்கை தாக்கினர். மேலும், அவரது வடை கடை வரை துரத்தி வந்து தாக்கியுள்ளனர் . இதில் இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து முகமது ரபிக் அளித்த புகாரின் பேரில் பெரியகடைவீதி போலீசார் சையது அபுதாஹிர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல சையது அபுதாஹிர் அளித்த புகாரின் பேரில் உக்கடம் போலீசார் முகமது ரபிக் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் .காயமடைந்த சையது அபுதாஹிர் மற்றும் முகமது ரபிக் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here