கெஸ்ட்ஹவுஸை காலி செய்ய சந்திரபாபு நாயுடுக்கு கெடு

0
1346

ஆந்திர மாநில முதல்-மந்திரியாக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக இருந்தது முதல் தற்போது வரை குண்டூர் மாவட்டத்தில் இருக்கும் உண்டவல்லியில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுசில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சந்திர பாபு நாயுடு வசிக்கும் கெஸ்ட்ஹவுஸ் உட்பட அந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள 30 க்கும் மேற்பட்ட கெஸ்ட்ஹவுஸ்கள் கிருஷ்ணா நதி கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன என்று கூறிய ஜெகன் மோகன் ரெட்டி அரசு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க ஒரு மாதத்திற்கு முன் உத்தரவு பிறப்பித்தது.

கெஸ்ட்ஹவுசை காலி செய்ய ஏற்கனவே கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் யாரும் அங்கிருந்து வெளியேறவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு வசிக்கும் கெஸ்ட்ஹவுசுக்கு இன்று காலையில் சென்ற அதிகாரிகள் ஒரு வாரத்தில் வீட்டை காலி செய்யக்கோரி மீண்டும் நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here