ஸ்ரீவைகுண்டத்தில் அரிவாளுடன் வீடியோ வெளியிட்டவர் கைது

0
2834

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் அருண்குமார் (27). இவர் கையில் அரிவாள் வைத்துக் கொண்டு சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைக்கும் விதமான வீடியோக்களை எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அருண்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here