மாசு படிந்த பல ரசாயன, நச்சு ஆலைகளால் பருவநிலை மாற்றத்தை சந்தித்த தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மூடப்பட்ட பின்பு மழை சீராக பெய்தது. பருவ மழையின் தொடக்கத்திலேயே தூத்துக்குடியில் பல இடங்களில் தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்தது.
கடந்த ஒரு மாதமாக மழை நீரை அகற்றாத வேதனையில் இருந்த பொதுமக்கள் நேற்று பெய்த கன மழையால் மேலும் கஷ்ட, நஷ்டங்களை நந்தித்தனர். லூர்தம்மாள்புரம், முத்தம்மாள் காலனி, அம்பேத்கர் நகர் போன்ற பகுதிகளில் வெள்ளமென மழைநீர் பாய்ந்தோடியது.
எனவே, மாநசராட்சி மழைநீரை எடுக்க நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தினை கண்டித்து பல இடங்களில் சாலை மறியல் நடந்தது. ஸ்டேட்பாங்க் காலனி 60 அடி சாலையிலும், திருச்செந்தூர் சாலையிலும், லூர்தம்மாள்புரத்திலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் கன மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இருக்கும் நிலையை சீர் செய்யாமல் மாநகராட்சி அலட்சியம் செய்வதாக பொதுமக்கள் கருதுகின்றனர். நீண்டகால திட்டங்கள் மூலம் தூத்துக்குடியில் மழைநீர் சேத தடுப்பு முன்னேற்பாட்டை மேற்கொள்ளவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.