கணவனை கொன்றுவிட்டு தற்கொலை செய்ததாக நாடகம் – மனைவி கள்ளக் காதலனுடன் கைது

0
736


கோவை கவுண்டம்பாளையம் அம்பேத்கர் வீதியில் வசித்தவர் ராஜா ( 36 ).இவருக்கு ரீனா (வயது 36) என்ற மனைவி உள்ளார்.இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது.குழந்தை இல்லை.இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும்,தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மனைவி ரீனா துடியலூர் போலீசாரிடம் புகாரளித்தார்.இதனையடுத்து இவ்வழக்கை துடியலூர் போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர்.

இந்நிலையில் தனது சகோதரர் ராஜா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சகோதரி மாலா (42) துடியலூர் போலீசில் புகாரளித்தார்.
இந்நிலையில் ராஜாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து இவ்வழக்கை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.போலீசாரின் விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் இறந்த ராஜாவின் மனைவி ரீனா மற்றும் கள்ளக்காதலன் சதீஷ் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here