திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு அருகே நீப்பத்துறை சாலையோரம் அன்பழகன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு சாலையோரம் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் கட்டுமான பணிக்காக செங்கல் ஏற்றிக்கொண்டு அந்த வழியாக வந்தனர். டிராக்டரில் டிரைவருடன் ராமசாமி மகன் விக்னேஷ் (24) என்பவரும் இருந்தார்.

டிராக்டர் சாலையில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் பாய்ந்தது. சுமார் 15 அடி தண்ணீரில் டாக்டர் மூழ்கியதில் டிராடரில் இருந்த விக்னேஷ் மூச்சுத்திணறி பலியானார். டிரைவர் நீந்தி தப்பினார். சம்பவம் அறிந்து விரைந்த கட்டமடுவு ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயலட்சுமி வெங்கட்ராமன் துணைக் காவல் கண்காணிப்பாளர் சரவணகுமாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி பணியாளர்கள் உதவியுடன் விக்னேஷ் உடலை மீட்டனர். வாகனத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.













