சட்டவிரோத தாது மணல் குவாரி ஆலைகள் மூலம் பிரபலமான வைகுண்டராஜன் மீது திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்ப ட்டுள்ளதால் அவர் கைதாவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த வருடம் நவம்பர் 18ஆம் தேதி மாரிக்கண்ணன் மற்றும் நாகராஜன் என்ற இரு நபர்களைத் தாக்கி, அதில் நாகராஜன் தப்பி ஓடி விடவே ,மாரிக்கண்ணன் என்பவரை மட்டும் கடத்தி தனி இடத்தில் ரகசியமாக மூன்றரை மணி நேரம் சட்ட சட்ட விரோதமாக அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தியதாக வக்கீல் மகாராசன் சுடலைக்கண்ணு மற்றும் வைகுண்டராஜன் மீது குற்றம்சாட்டப்பட்டது.
அப்போது சில காவல் அதிகாரிகள் வைகுண்டராஜனுக்கு ஆதரவாக செயல்பட்டு அவரை காப்பாற்றினர்.
இந்நிலையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் குற்ற எண் 402/ 2021 படி இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 294B, 143, 323, 341, 342, 365, 501(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது.தனி படை அமைத்து அவரைத் தேடி வருவதாக போலீசார் கூறுகின்றனர்.
வைகுண்டராஜன் ஏற்கனவே டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் மத்திய அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் மூன்று வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு தற்சமயம் ஜாமீனில் வெளியே உள்ளதால், இவ்வழக்கில் முன்ஜாமீன் பெறுவதிலும் சிக்கல் உள்ளதாக தெரிகிறது.