திருமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.5 லட்சம் மோசடி: மருந்தாளுநர் கைது

0
1015


திருமங்கலம் விடத்தகுலம் ரோடு கற்பகம் நகரில் அக்ரிகல்ச்சர் புரட்யூஸ்அன்ட புரொடியூசர் கோவாப்பரேடிவ் அசோசியேஷன் பொதுமேலாளர் பன்னீர்செல்வம். இவர், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், இந்த கூட்டுறவு சங்கத்தின் கோவாபரேடிவ் மெடிக்கல் ஷாப் திருமங்கலம் கிளையில் பார்மசிஸ்டாக வேலை பார்த்து வருகிறார் திருமங்கலம் கோர்ட்ரோடுவை சேர்ந்த வசந்தகுமார் (40) .இவர் 2019 பிப்ரவரியிலிருந்து 2019 டிசம்பர் வரையில் போலியான ஆவணங்களை தயாரித்து தரக்குறைவான மருந்துகளை வாங்கி விற்பனை செய்து அரசாங்கத்திற்கு ரூபாய் 4 லட்சத்து 70 ஆயிரத்து 745 மற்றும் பதினோரு பைசா மோசடி செய் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்டுறவு சங்க மருந்து கடை மருந்தாளுநர் வசந்தகுமாரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here