கோவை அருகே குட்டையில் கஞ்சா செடி வளர்ப்பு

0
908

சூலூர்வட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பம்பட்டியில் ராமையன் குட்டையில் கஞ்சா செடி மர்ம நபர்களால் மறைவான இடத்தில் வளர்க்கப்பட்டுள்ளது.


நேற்று மாலை அப்பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் கஞ்சா செடி வளர்க்கப்பட்டுள்ளது குறித்து கண்டறிந்தனர். இந்த தகவல் அப்பகுதியினர் இடையே வேகமாக பரவியது. இதனையடுத்து சூலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதிக்கு சென்ற சூலூர் காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் அங்கு பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை கண்டறிந்தனர்.

உடனடியாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் வரவழைக்கப்பட்டு அவர் முன்னிலையில் அந்த செடிகளை வேருடன் பிடுங்கி தீயிட்டு அழித்தனர். இப்பகுதியில் அதிக அளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாகவும் கஞ்சா வேண்டுவோருக்கு இருசக்கர வாகனங்களில் கொண்டு வந்து சிலர் வினியோகிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here