நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடியான எஸ்டேட் மணியை தமிழக போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் இந்த நிலையில் மூணாறு பகுதியில் தலைமறைவாக உள்ளதாக ரகசிய தகவலின் பெயரில் வேலூர் போலீசார் இன்று சிறிது நேரத்திற்கு முன்பு அவரை கைது செய்தனர்.
எஸ்டேட் மணி மீது 7 கொலை வழக்கு உள்ளிட்ட 29 வழக்குகள் உள்ளன 2009இல் நெல்லையில் ராயல்டி மதனை தலையை துண்டித்து கொலை செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது.