யாஸ் புயல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து செங்கோட்டை அருகே உள்ள 36.10 அடி கொள்ளவு கொண்டகுண்டாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று அணை தனது முழுக்கொள்ளவையும் எட்டி நிரம்பியது.
இதனையடுத்து அணைக்கு வரும் 110 கன அடித் தண்ணீர் அப்படியெ வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நிரம்பியதைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .













