குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்கள் குறித்து 1098 என்ற எண்ணில் குழந்தை கள் புகார் தெரிவிக்கலாம் என்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி மேற்கண்ட எண்ணை தொடர்பு கொண்டு தனக்கும், தனது 13 மற்றும் 11 வயது தங்கைகளுக்கும் தனது தந்தையே பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த குழந்தைகளுக்கு அவர்களின் தந்தையே பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதுகுறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 16 வயது சிறுமி புகார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் தந்தையை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு அவரை கைது செய்தனர்.