100 நாட்களில் வரலாற்று சாதனை; பிரதமர் மோடி பேச்சு

0
535

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு 2-ம் முறையாக பொறுப்பேற்று 100 நாட்களில் பல வரலாற்று சாதனைகளை புரிந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மும்பையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடக்கவிழாவில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பேசினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
அனைத்து துறைகளிலும் வேகமான வளர்ச்சியை எட்ட வேண்டும் என பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். ஜல் ஜீவன் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் நாடுமுழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உதவி வருகிறோம்.
முஸ்லிம் பெண்களின் நலனுக்காக முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். குழந்தைகளின் பாதுகாப்புக்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நமது மக்களின் கடந்த கால, நிகழ்கால கனவுகளையும், குழந்தைகளின் மகிழ்ச்சியான வாழ்க்கையை உறுதிப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்கிறாம்.
மும்பை மக்கள் எளிதாகவும், வேகமாகவும் பயணம் செய்ய ஏதுவாக 20 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நாடு தற்போது 5 டிரில்லியன் பொருளாதாரத்துடன் முன்னேறிக் கொண்டு இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் மக்களின் நலனுக்காக 100 லட்சம் கோடி ரூபாயை செலவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here