வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

0
410

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அவ்வப்போது ஏவுகணை சோதனையை நடத்தி வரும் வடகொரியா, நடப்பு மாத இறுதியில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பாக கூறியது. இந்த சூழலில், மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது.

இன்று அதிகாலை இரண்டு முறை, பியாங்கன் மாகாணத்தை நோக்கி இருமுறை ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்திற்கு பிறகு வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனை இது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. மேலும், சோதனை நடத்தப்பட்ட ஏவுகணை எந்த வகையைச் சேர்ந்தது என்று உடனடியாக விவரம் எதுவும் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருக்கும் தகவலை நாங்கள் அறிந்து இருப்பதாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், வடகொரியாவில் நிலவும் சூழலை எங்களின் நேச நாடுகளுடன் இணைந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க அதிகாரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here