‘டிக்-டாக்’ செயலிக்கு இளைஞர்கள் மட்டுமின்றி குடும்ப பெண்களும் அடிமையாகி விட்டார்கள் என்றே கூறலாம். இதற்கு ஒருபுறம் பாராட்டுகள் குவிந்தாலும், மறுபுறம் ‘டிக்-டாக்’ செயலி கலாசார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதோடு கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் நாமக்கல்லில், துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ‘டிக்-டாக்’ வீடியோ ஒன்று இளைஞர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர் ஒருவரை, 3 இளைஞர்கள் கத்தியை காட்டி வழிமறிப்பது போலவும், அதற்கு அந்த இளைஞர் துப்பாக்கியை நீட்டி சுடுவது போலவும் ‘டிக்-டாக்’ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஆயுதங்களுடன் ‘டிக்-டாக்’ வீடியோ எடுத்த இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














