நெல்லை அருகே ராமையன்பட்டி சத்திரம் புது குடியைச் சேர்ந்தவர் கண்ணன் (35). இவருக்கு ராஜபதியைச் சேர்ந்த செல்வி என்பவர் உடன் திருமணம் ஆகி மாரிச்செல்வி (13), சமீரா (7) என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இன்று பிற்பகல் 2 மணி அளவில் மனைவி ஊருக்கு சென்ற கண்ணன், தனது மாமியார் ஆண்டாள் (50) மற்றும் இரு குழந்தைகளுடன் தீபாவளிக்கு துணி எடுப்பதற்காக நெல்லையை நோக்கி பைக்கில் வந்தார்.

தச்சநல்லூர் உலகம்மன் கோயில் கடந்து பாலத்திற்கு அருகே வந்தபோது எதிரே டீசல் ஏற்றுவதற்காக சென்ற டேங்கர் லாரியும் பைக்கும் மோதின.இதில் கண்ணன் அவரது மாமியார் ஆண்டாள் மற்றும் குழந்தைகள் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக பலியாகினர். தச்சநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.









