கோவை உக்கடம் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவி பொன் தாரணி நேற்று முன்தினம் மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பொன் தாரணி முதலில் படித்த சின்மயா பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததன் காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மாணவி, தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி பொன் தாரணி கடிதம் எழுதி வைத்து இருந்தார்
. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல் துறையினர், இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் போலீஸ் விசாரணை வளையத்தில் இருந்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீசார் உடல் பரிசோதனை செய்த பின்னர் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தபட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.