பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்படுகொலை

0
885

மதுரை எல்லிஸ் நகர் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வரும் முகமது சையது ஈசாக் என்கிற வாலிபர் இன்று காலை மதுரை பழங்காநத்தம் வி.கே. பி. நகர் பகுதியில் உள்ள விவசாய நிலைங்களில் மர்மமான நிலையில் இறந்து கிடந்ததாக எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்திற்கு அப்பகுதி பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்,


அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.எஸ். காலனி காவல் ஆய்வாளர் பிளவர் ஷீலா துணை ஆய்வாளர் மணிக்குமார் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். திலகர் திடல் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையாளர் ரமேஷ் மற்றும் மாநகர் சட்ட ஒழுங்கு துணை ஆணையர் தங்கதுரை தலைமையில் விசாரணை மேற்கொண்டு, தொடர்ந்து மேப்பநாயை லிங்கா வரவலைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.


பின்னர், வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார் நடத்தி முதற்கட்ட விசாரனையில், இறந்தவர் மீது பல்வேறு திருட்டு வழக்கு இருப்பதாகவும் முன் விரோத காரணமாக கொலை செய்யப்பட்டாரா இல்லை.? வேற எதுவும் காரணமாக இருக்குமா..? என்று பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் , அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here