ராஜினாமா: இப்போது அஜித், சிறிது நேரத்தில் பட்னவிஸ்

0
723

‘நாலு நாள் போதுமய்யா சாமி’ என்று மகாராஷ்டிர துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி உரிமை கோரவிருந்த நிலையில், தேசியவாத காங்கிரசை உடைத்த அஜித் பவார் சில எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுடன் கூட்டணி கண்டார். பாஜக சார்பில் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகவும், நான்கு நாட்களுக்கு முன்பு அதிகாலை ரகசிய பதவி பிரமாணம் செய்தனர்.
ஆனால், 4 பேர் தவிர பிற எம்.எல்.ஏக்கள் சரத் பவாரை தஞ்சமடைய, இரு எம்.எல்.ஏக்கள் தாமதமாக போய் சேர்ந்தனர். தொடர்ந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பு நடந்தது. உச்சநீதிமன்றமும் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அரசுக்கு கெடு கொடுத்தது. இதனால் தானாகவே பயந்துபோன அஜித் பவார் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் பட்னவிசிடம் கொடுத்துவிட்டார்.
சிறிது நேரத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் பட்னவிஸ், இதே வழியில், கர்நாடகாவில் எடியூரப்பா ஒருமுறை செய்தது போல் ராஜினாமாவை அறிவிப்பார் எனத்தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here