காதலனுடன் சென்ற நெல்லை மாணவிக்கு ஐகோர்ட்டு அறிவுரை

0
419

நெல்லையைச் சேர்ந்தவர் தனது மகள் 19 வயது வாலிபருடன் திருமணம் செய்து சென்னை சென்று விட்டார். இதனால் அவரது கல்லூரி படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே மகளை மீட்டு படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மாணவியும் ஆஜர்படுத்தப்பட்டார்.

மாணவியை அழைத்துச் சென்ற வாலிபரின் பெற்றோர் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மாணவியை தொடர்ந்து படிக்க வைக்க ஒத்துழைப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து மாணவிக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

18 வயது நிரம்பிய மாணவி பெற்றோர் வசம் செல்ல விரும்பாததால் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படிக்க வேண்டும். பின்னர் இருவருக்கும் 21 வயது பூர்த்தியானதும் தங்கள் பெற்றோர் விருப்பத்தையும் பெற்று திருமண வாழ்க்கையை தொடங்கலாம்.

முதலில் படிப்பு, பின்னர் தான் திருமணம் என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கையும் முடித்து வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here