கோவை பாப்பநாயக்கன் பாளையம் பண்ணாரிஅம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ராமராஜ் என்பவரின் மகள் உமாஸ்ரீ (30). திருநங்கையான இவர் தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் இருந்த செல்போன் ஒன்று திருடு போனது. இதை அவரது வீட்டில் வசிக்கும் அருகில் வசிக்கும் மற்ற ஒரு பெண் தான் திருடி இருப்பார் என்ற சந்தேகம் உமா ஸ்ரீக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ்காரர் மூவேந்தன் வேல்பாரி (50) என்பவரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்று உமாஸ்ரீ இடம் விசாரணை நடத்திய மூவேந்தன் வேல்பாரி திருநங்கை என்ற எண்ணத்தில் ஆபாச வார்த்தைகள் பேசியதோடு பாலியல் சீண்டல் ஈடுபட்டுள்ளார் .
இதேபோல உமாஸ்ரீ மொபைல்பனை திருடியதாக
புகாரில் குறிப்பிட்டுள்ள பெண்ணிடம் சென்று விசாரணை நடத்திய மூவேந்தன் வேல்பாரி அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு இரவில் வருவேன் என்று கூறி ஆபாசமாக பேசியுள்ளார். இதையடுத்து உமாஸ்ரீ கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு வந்த போலீஸ்காரர் தன்னிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டதாக புகார் அளித்தார். மேலும் விசாரணைக்கு வந்த பொழுது குடிபோதையில் வந்து இருந்ததாகவும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து விசாரணை நடத்திய ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் போலீஸ்காரர் மூவேந்தன் வேல்பாரி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதன்படி போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.












