கோவை பேரூர் பகுதியில் பாரம்பரியமான
பேரூர் ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ள பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
தமிழ் படிப்புக்கு நீண்ட பாரம்பர்யத்தை கொண்டது. அங்கு திருநாவுக்கரசு என்பவர் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் அந்தக் கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறி ஆபாசமாக பேசுவதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில், திருநாவுக்கரசு மாணவி ஒருவருக்கு இரவு நேரத்தில் ஆபாசமாக பேசிய உரையாடல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இரவு 9.30 மணிக்கு மேல் அந்த மாணவிக்கு டெலிகிராம் ஆப்பில் மெசேஜ் செய்யத் தொடங்கும் திருநாவுக்கரசு, “வீட்ல எல்லாரும் வந்துட்டாங்களா? உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்! பக்கத்துல யாராச்சும் இருக்காங்களா? உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு, உன் முகம் ரொம்ப அழகா இருக்கு, நீயும் நானும் இனி ரொம்ப க்ளோஸ், நீ என் கூட இருந்தா நல்லா இருக்கும், சமைக்க பழகிக்கோ,
தனியா இருக்க போர் அடிக்கலயா, வீட்ல அம்மா இருக்காங்க, இல்லாதப்போ சொல்றன் நீ வா, நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கலாம்.” என்றெல்லாம் பேசியுள்ளார்.
மேலும், திருநாவுக்கரசு அந்த மாணவிக்கு சட்டையைக் கழற்றி விட்டு உள்பனியனுடன் கட்டிலில் சாய்ந்த படி செல்பி எடுத்து அனுப்பியுள்ளார். பிறகு இதேபோல ‘நீயும் போட்டோ எடுத்து அனுப்பு’ என்று கூறுகிறார். இதுகுறித்து அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கேட்டதற்கு, திருநாகக்கரசு அதை ஒப்புக்கொள்ளும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, திருநாவுக்கரசு மீது கல்லூரி நிர்வாகம் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரசு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்களின் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
இந்நிலையில், திருநாவுக்கரசு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் மாணவர்கள் போராட்டம் இன்று காலை முதல் நடத்தி வருகின்றனர்.
பெயர் வெளிட விரும்பாத மாணவர் ஒருவர் கூறும் தகவல், நான் கல்லூரி படிக்கும் போதும் இந்த ஆள் இப்படித்தான் என்றார், தொடர்ந்து கேட்டபோது, கல்லூரி என் எஸ் எஸ் ஆசிரியராக இருந்த போது வருடம் ஒருமுறை சிறுவாணி கேம்ப் கூட்டிச்சென்று பல இளம்பெண்களை பாலியல் தேவைகளுக்கு உட்படுத்தியுள்ளார் என்றார். யாரும் இவரை எதிர்க்க முடியாது. எதிர்த்தால் செமஸ்டரில் பெயில் ஆக வைத்து விடுவார்.
அழகான ஏழை வெள்ளந்தி மாணவிகளையே இப்படி செய்வது தொடர்ந்தாலும், இவரை யாரும் கண்டிக்க முடியவில்லை என்றார். பல ஆண்டுகளுக்கு முன் பேரூர் காவல்நிலையத்தில் ப்ரீத்தீ சுகன்யா, என்ற மாணவிகள் பாலியல் தொந்தரவு குறித்து புகார் கொடுத்துள்ளனர். அது குறித்து நடவடிக்கையில்லை,.சில மாணவிகளை வீட்டிற்கு வரச்சொல்லி தவறாக நடந்ததைக் கண்டு திருநாவுக்கரசு மனைவி கண்டித்து உள்ளார்.
தொடர்ந்து பல பெண்களை சீண்டல்கள் செய்வதை தெரிந்த மனைவி விவாகரத்து வாங்கிக் கொண்டு வெளிநாடு சென்று விட்டார். நிர்வாகத்தை துணையாக வைத்துக் கொண்டு எதையும் துணிவுடன் செய்கிறார் என்றார்.மேலும் இது குறித்து பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரிடம கேட்டபோது , புகார் வந்த பேராசிரியர் திருநாவுக்கரசு மீது கல்லூரி நிர்வாகம் சார்பாக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது போராட்டம் செய்து வருபவர்கள் கல்லூரியிலிருந்து படித்து விட்டு வெளியே சென்ற முன்னாள் மாணவர்கள் என்றார்.












