நெல்லை அருகே அதிகரிக்கும் ஆடு,மாடு திருட்டு – போலீஸ் பூத் கேமராவை பழுதுபார்க்க கோரிக்கை

0
668

நெல்லை அருகே உள்ள மணப்படை வீடு பகுதியில் அதிக எண்ணிக்கையில் ஆடு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அவை அடிக்கடி காணாமல் போவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இப்பகுதி வெள்ளி மலை போலீஸ் பூத்தில் கண்காணிப்பு கேமரா இருக்கிறது. ஆனாலும் அது சரியாக வேலை செய்யாததால் மாடு திருட்டை தடுக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, கால்நடைகளை திருடுவது யார் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதால் கிராம மக்களிடையே பூசல் எழ வாய்ப்புள்ளது.

எனவே, உடனடியாக போலீஸ் பூத் கண்காணிப்பு கேமராவை சரி செய்வதோடு, மணப் படை வீட்டில் உள்ள அனைத்து தெருக்களிலும் கேமராக்களை பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here