ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் காலமானார்

0
527

ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே தனது 95 வயதில் இறந்துவிட்டார் என்று அந்நாட்டின் தற்போதைய அதிபர் எம்மர்சன் மனாங்காக்வா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

“ஜிம்பாப்வேயின் நிறுவன தந்தையும் முன்னாள் அதிபருமான சி.டி. ராபர்ட் முகாபே காலமானதை மிகுந்த வருத்ததோடு அறிவிக்கிறேன் என அதிகாரப்பூர்வ அதிபர் எம்மர்சன் ட்விட்டரில் கூறப்பட்டு உள்ளது.

முகாபே சிங்கப்பூரில் இறந்தார், அங்கு அவர் சமீபத்தில் அடிக்கடி மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார் என இந்த விஷயத்தை நேரடியாக அறிந்த ஆதாரங்கள் ராய்ட்டர்சிடம் கூறி உள்ளது.

முகாபே ஒரு ஆப்பிரிக்க விடுதலை வீரராகவும், இன நல்லிணக்கத்தின் தலைவராகவும் விளங்கினார். ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக ஜிம்பாப்வே அதிபராக விளங்கினார். முகாபே, இறுதியில் நவம்பர் 2017 இல் தனது சொந்த ஆயுதப்படைகளால் பதவியில் இருந்து தூக்கி எறியபட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here