தகவல் கொடுத்த பெண்ணுக்கு டி.ஐ.ஜி. பாராட்டு

0
945


கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள செந்தில் நகர் பகுதியில் கடந்த 1ஆம்தேதி இரவு நிர்மலா(40) என்பவரின் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் கதவை உடைத்து திருடிக் கொண்டு இருந்தனர். அந்த சத்தத்தை கேட்டு அருகில் உள்ள நாகராஜ் என்பவரின் மனைவி கோமதி வெளியே வந்து பார்த்துள்ளார். அவர் உடனடியாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.


இந்த நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிச் செல்ல முயன்ற முன்னாள் ஆயுதப்படை காவலர் முனீஸ்வரன் என்பவரை பொதுமக்களுடன் சேர்ந்து போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். மற்றொரு நபர் தப்பி சென்றார்.


இதனையடுத்து திருட்டு சம்பவம் குறித்து தகவல் அளித்த கோமதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இனிப்பு அளித்து வாழ்த்து தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here